மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றின் அபாயப்பகுதியாக மாறும் கண்டி..!

- Advertisement -

கண்டி மாவட்டத்தில் நேற்றைய நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 338 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

- Advertisement -

கண்டி மாநாகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், மெனிக்கின்ன, தலவத்துவோயா, கட்டுகஸ்தோட்ட, கலகெதர, கம்பொல மற்றும் பூஜாபிட்டிய ஆகிய பிரதேசங்களில் தலா 20 மேற்ப்பட்டவர்கள்  தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டின் மாத்தளை மாவட்டத்தை தவிர்ந்து ஏனைய 24 மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தில் 321 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 277 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 184 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 104 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 94 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நுவரெலிய மாநகரசபை பகுதிகளில் இருந்து 173 பேர் உள்ளடங்களாக நுவரெலிய மாவட்டத்தில் 228 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் 41 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 33 பேரும், பதுளை மாவட்டத்தில் 26 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 பேரும், வவுனியா மாவட்டத்தில் 10 பேரும் நேற்றைய நாளில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 386 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 371 பேரும்,  வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 15 பேரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 40 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 34 ஆயிரத்து 251 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஆயிரத்து 352 பேர் குணமடைந்த நிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 17 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 22 ஆயிரத்து 310 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 941 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் மாத்திரம் கொரோனா தொற்று காரணமாக 737 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட தினத்தில் இருந்து கடந்த ஜனவரி முதலாம் திகதி வரையான 8 மாத காலப்பகுதிக்குள் 208 பேர் மாத்திரமே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz