மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்பாராத அதிகரிப்பை காட்டியுள்ள கொரோனா மரணங்கள்…

- Advertisement -

புதுவருட கொரோனா கொத்தணியில் இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 35 நாட்களுக்குள் குறித்த 448 பேரும் உயிரிழந்துள்ளமை சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், நேற்று முன்தினம் 34 கொரோனா உயிரிழப்புகள் நாட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அவர்களில் 32 பேர் கொவிட் நிமோனியா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 8 நாட்களில் மாத்திரம் 201 கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்றைய நாளில் மாத்திரம் 36 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமை சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நாளில் பதிவு செய்யப்பட்ட அதிக அளவிலான கொரோனா உயிரிழப்புகள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 51 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மூன்றாவது அலையில் கர்ப்பிணித் தாய்மார்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 ஆயிரத்து 623 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பதிவு செய்யப்பட்ட சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

அத்துடன், நாட்டில் கடந்த 10 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக 3 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மேலும், புதுவருட கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 51 ஆயிரத்து 343 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், எதிர்வரும் 100 நாட்களில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை அண்மிக்கும் என, சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஆயிரத்து 222 பேர் குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 இலட்சத்து 22 ஆயிரத்து 367 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் கொரோனா சிகிச்சை நிலையங்களில் 27 ஆயிரத்து 961 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz