மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒக்ஸிஜன் இருப்பு குறித்து சுகாதாரதரப்பு விடுத்துள்ள அறிவிப்பு..!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான ஒக்ஸிஜன் பற்றாக்குறை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

களுபோவிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான ஒக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, நாளேடுகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அத்துடன், நாட்டில் வைத்திய நடவடிக்கைகளுக்கான ஒக்ஸிஜன் உற்பத்தி நிறுவனங்களின் விநியோக நடவடிக்கைகளிலும் எந்தவிதமான பற்றாக்குறையும் ஏற்படவில்லை எனவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளுக்கு பெரிய அளவிலான ஒக்ஸிஜன் சிலிண்டர்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த நடைமுறையை மேலும் செயற்றிறன் மிக்க முறையில் முன்னெடுப்பது தொடர்பில், ஒக்ஸிஜன் விநியோகிக்கும் நிறுவனங்களுடன் நாளை காலை விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது களுபோவிலை வைத்தியசாலையிலோ அல்லது முல்லேரியா வைத்தியசாலையிலோ ஒக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 எனினும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை எனப்படும் முல்லேரியா வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் பற்றாககுறை காணப்படுவதாக சிங்கள நாளிதழொன்று தெரிவித்துள்ளது.

முல்லேரியா வைத்தியசாலைக்கு நாளாந்தம் 150 ஒக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகின்ற போதிலும், வைத்தியசாலையின் கையிருப்பில் 80 சிலிண்டர்களே காணப்படுவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மே 15 ஆம் திகதிக்கு முன்னர் முல்லேரியா வைத்தியசாலையின் ஒக்ஸிஜன் சிலிண்டர் தேவையை நிவர்த்தி செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz