மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா பரவல் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு..!

- Advertisement -

தடுப்பூசி வழங்கப்படுவதே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான தீர்வாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்று க்கொடுப்பதற்கான முறையான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

அத்துடன், ஆரம்பம் முதல் கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார துறையினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களையும் முறையாக பொதுமக்கள் கைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்க்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் அனுமதியளிக்க்படவுள்ள தடுப்பூசிகளை நாட்டுக்குக்கு கொண்டுவருவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதுவரை  astrazeneca முதலாவது கொரோனா தடுப்பூசி 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு பெற்றுக்கொடுக்க்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாவது தடுப்பூசி எதிர்வரும் மேமாதம் முதலாம் வாரத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கென astrazeneca கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுப்படும் உலகின் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரஸ்யாவிடம் இருந்து இரண்டு இலட்சம் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிகள் எதிர்வரும் வாரத்திலும், நான்கு இலட்சம் தடுப்புசிகள் மே மாத முதல் வாரத்திலும் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், 8 இலட்டசம் தடுப்பூசிகள் ஜுன் மாதமும், 12 இலட்சம் தடுப்பூசிகள் ஜுலை மாதத்திலும் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும்  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைத்தவுடன், சீனாவினால் வழங்கப்பட்டுள்ள சினபாம் தடுப்பூசி மக்கள் பாவனைக்கு உட்ப்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும்  தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz