மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரித்தானிய கொரோனா வைரஸ் இலங்கையில் தீவிரமாக பரவுவதாக உறுதி..!

- Advertisement -

நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் பரவி வரும் மாறுபட்ட கொரோனா வைரஸ் வகையே தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன், கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருணாகலை ஆகிய பிரதேசங்களில் குறித்த பிரித்தானிய வகையைச் சார்ந்த கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மூலம் குறித்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த மாறுபாடு கொண்ட பிரித்தானிய கொரோனா வைரஸ், நாட்டில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய நாளில் மாத்திரம் ஆயிரத்து 111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 200 பேருக்கு நேற்றைய நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், குருணாகலை மாவட்டத்தில் 119 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 70 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 198 பேரும் நேற்றைய நாளில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் கண்டி மாவட்டத்தில் 74 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 55 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 32 பேரும், மொணராகலை மாவட்டத்தில் 41 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 3 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்து 794 ஆக காணப்படுகிறது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 976 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 7 ஆயிரத்து 574 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் எட்டுப்பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 655 ஆக உயர்வடைந்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz