மெய்ப்பொருள் காண்பது அறிவு

இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் புதிய கொரோனா வைரஸ் …!

- Advertisement -

தற்போது கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கண்டறியப்பட்டுள்ளதாக  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் நீலிகா மலவிகே இதன் போது குறிப்பிட்டார்,

- Advertisement -

அத்துடன் தற்போதைய புதிய வகை கொரோனா வைரஸ் இளைஞர்களையெ அதிகம் பாதிக்கும் சாத்தியமுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டை மீண்டும் முடக்குவதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்

எனினும், எதிர்வரும் நாட்களில், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக, இராணுவத் தளபதி  இதன்போது சுட்டிக்காட்டினார்

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்புபவர்களை தனிமைப்படுத்தும் கால எல்லையை மீண்;ம் மறுசீரமைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பும் நபர்கள் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் கால எல்லையை 14 நாட்களாக நீடிக்க தீர்மானிக்க்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் தொற்று அறிகுறி வெளித்தெரியும் நாட்கள் தொடர்ந்தும் அதிகரித்துவருவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே, இவ்வாறு தனிமைப்படுத்தல் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக  இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவிடம் இருந்து மாத்திரமல்லாது, ஏனைய நாடுகளிடம் இருந்தும் astrazeneca கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது

இந்தியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் ஏற்ப்பட்டுள்ள தாமத நிலையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பூசி தொடர்பான செயலணி தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz