மெய்ப்பொருள் காண்பது அறிவு

1500 பேருக்கு தொற்று உறுதி – வெலிமடை நாவலப்பிட்டி பகுதிகளில் கொரோனா உயிரிழப்பு..!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்றைய நாளில் மாத்திரம் மேலும் ஆயிரத்து 531 பேர் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதில் புதுவருட காலத்தில் ஏற்ப்பட்ட கொரோனா கொத்தயிணில் ஆயிரத்து 491 பேரும், வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பிய 40 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் இதுவரை ஒரே நாளில் அதிகளவில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்பமாக நேற்றைய நாள் காணப்படுகின்றது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 445 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 10 ஆயிரத்து 740 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 10 ஆயிரத்து 378 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் மேலும் ஆறு உயிரிழப்புகள் நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, நாவலப்பிட்டிய, கண்டி, வத்தளை, வெலிமடை, களுத்துறை மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz