மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 796 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது.

- Advertisement -

இதன்படி,  தொற்றுக்குள்ளான 4 ஆயிரத்து 484 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, திருக்கோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 46 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அத்தியாவசிய தேவைகள் இன்றி அநாவசியமாக திருகோணமலை மாவட்டத்திற்கு பிரவேசிப்பதை தவிர்க்குமாறு கிழக்குமாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்ள்ளதாக சுகாதார தரப்பு குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் திருகோணமலை மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கபடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சுகாதார வழிமுறைகளை மிறி செயற்ப்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னடுக்குமாறும் பாதுகாப்பு துறையினருக்கு கிழக்குமாகாண ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடும் நடவடிக்கைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்

இதன்படி, சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடுவதற்கான நடவடிக்கை நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா அச்ச நிலை காரணமாக சிலாபம் கொஸ்வத்த பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின்  – கனேவத்த ரயில் நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என  அறிவிக்கப்பட்டுள்ளது

கனேவத்த ரயில் நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஐந்து கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து குருநாகலை மாவட்டத்தின் சில கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

இதன்படி, தித்தவெல்லகல,  நிராவிய மற்றும் நிக்கடலுபொத ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தற்காலிக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கமைய அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தொற்றுக்குள்ளானவருடன் நெருங்கிய தொடர்புடைய ஏனைய பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் இவர்கள் நேரடி தொடர்புகளை கொண்டிருக்கவில்லை எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz