மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்டி, பதுளை மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு -விபரம் உள்ளே!

- Advertisement -

நாட்டில் கடந்த  24 மணிநேரத்தில் அதிகளவான கொரோனா  தொற்றாளர்கள் கொழும்பு மாவட்’டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்றைய நாளில் அடையாளங் காணப்பட்ட 711 கொரோனா தொற்றாளர்களுள்  236 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்

- Advertisement -

இதன்படி கொழும்பு மாவட்டத்தின்  கொம்பெனித்தெரு வெள்ளவத்தை  புறக்கோட்டை  மருதானை  மட்டக்குளி  தெஹிவளை  கிராண்ட்பாஸ்  நாரஹேன்பிட்டி  ஆகிய பகுதிகளில்  கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய நாளில்  அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில்  93 பேரும்  காலி மாவட்டத்தில்  63 பேரும்  கண்டி மாவட்டத்தில் 60 பேரும்  குருணாகல் மாவட்டத்தில்  74 பேரும்  பதுளையில்  53 பேரும்   மாத்தறை மாவட்டத்தில் 30 பேரும்  நேற்றைய நாளில் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஏனையவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி விடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  நாடளாவிய ரீதியில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  66 ஆயிரத்து 409    ஆக பதிவு   செய்யப்பட்டுள்ளதுடன் 59 ஆயிரத்து  882 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து  194 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருவதுடன் இதுவரை 332 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 91 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7 ஆயிரத்து 400 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம்- பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம் காரணமாக  பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்இடம்பெயர்ந்துள்ளனர். பல தசாப்தங்கலாக சீற்றம் கொண்டுள்ள StVincen எரிமலை வெடிப்புக்குள்ளானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் இடம்பெயறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவிக்கின்றன. இதேவேளை ...

எண்ணெய் மோசடி விவகாரத்தை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொண்டு வந்துள்ளது: மஹிந்தானந்த!

நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற தேங்காய் எண்ணெய் மோசடியினை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொணர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

விஷத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார தரப்பினர்!

சுபிட்சமான தொலைநோக்கு வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த  ஆரோக்கியமாக உணவுக்கொள்கை முழுமையடையவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுறுத்த பாதெனிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் தாம் கவலையடைவதாகவும் அவர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளார். பாடசாலை...

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை...

தங்கொட்டுவவில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள்- உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளார். தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேங்காய்...

Developed by: SEOGlitz