மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் அதிகரிக்கும் அச்சநிலை – 873 பேருக்கு கொரோனா – உயிரிழப்பும் அதிகரிப்பு…!

- Advertisement -

நாட்டில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது,

- Advertisement -

பேலிய கொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும், கைதிகள் 7 பேரும் இவ்வாறு நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், நாட்டில் அன்மைய நாட்களில் ஒரேநாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின்  மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 62 ஆக அதிகரித்துள்ளது,

மேலும் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது.,

பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கடுமையான நியூமோனியாவினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது,

மேலும், அத்துருகிரிய பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவர் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம  வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், அவருக்கு கொவிட் நியுமோனியா அதிகரித்ததில் உயிரிழப்பு சம்பவித்துள்ளது.

இதேவேளை,  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 769 பேர் குணமடைந்த நிலையில் நேற்று  வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 984 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் 66 சிகிச்சை நிலையங்களில் 7ஆயிரத்து 804 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 792 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடளாவிய ரீதியில் கிராம விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில்  332 கிராம விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, இதற்கான நிகழ்வுகள் பிரமதர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுபீட்சமான தொலை நோக்கு திட்டத்திற்கமைய, அடுத்த சந்ததியினருக்கு...

கொரோனா தொற்று – புலத்கொஹுபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஆண் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 303 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில்...

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

Developed by: SEOGlitz