இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள தேசிய கிரிக்கட் வீரரொருவர் இலங்கை அணியின் பெண் உடற்கூற்று மருத்துவர் ஒருவருடன் முறைகேடாக நடந்துகொண்டதாக, வௌியாகும் செய்திகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஶ்ரீலங்கா கிரிக்கட் கோரியுள்ளது,
பிரதான ஊடகங்களில் வௌியாகும் விடயத்தின் பாரதூரமான தன்மையை கருத்திற் கொண்டு இந்த செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை அணியின் முகாமையாளர் அசந்த டி மெல்லுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,
அணி முகாமையாளரின் அறிக்கையின் பின்னர் அது தொடர்பில் விசாரணை தேவைப்படுமிடத்து அது தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்த தயாராகவுள்ளதாகவும் ஶ்ரீலங்கா கிரிக்கட்டின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,
இது தொடர்பில் எவர் மீதாவது குற்றங்கள் நிரூபிக்கப்படுமானால் எந்தவொரு தரப்புக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது,