மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – 592 பேருக்கு தொற்று உறுதி

- Advertisement -

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் தர்கா நகரைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்றுவந்த குறித்த நபர் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

அம்பன்போல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலே உயிரிழந்துள்ளார்.

மேலும், கொழும்பு 5 பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரும் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கொதலாவல பாதுகாப்பு அறிவியல் பீடத்தின் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட குறித்த பெண் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கலேவென பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும் கடந்த 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கலேவென மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் படி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 171 பேர் நேற்றைய தினம்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 105 பேரும், சிறைச்சாலைகளில்  தொற்றுக்குள்ளான 66 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்று மாத்திரம் 592 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றுப் பரவல் இரண்டாவது அலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 706 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 766 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy இற்கு 3 வருட சிறைத்தண்டனை!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy  இற்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில்  மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், Nicolas Sarkozy  ஆதரவாக செயல்பட்ட இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள்...

கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின் முன்னிலை!

மியன்மாரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி முதல் முறையாக காணொளி மூலம் நீதிமன்றின்  இன்று  முன்னிலையாகி உள்ளார். இதனைதொடர்ந்து,  ஆங் சான் சூகி  உடல் நிலை நலமாக இருப்பதாக அவரது...

உயிர்த்த ஞாயிறு அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கமிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை,  ஜனாதிபதி செயலாளரினால் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

Developed by: SEOGlitz