நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.
பேலியக்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 330 பேரும், கைதிகள் 7 பேரும் இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் ஏற்பட்ட கொரோனாதொற்றின் இரண்டாம் அலையில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும் 769 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 66 கொரோனா சிகிச்சை நிலையங்களில் 7 ஆயிரத்து 268 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அத்துடன், 792 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கபட்டு வருகின்றனர்.