மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவினால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவு: முழு விபரம் உள்ளே!

- Advertisement -

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதன்படி வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மரணத்திற்கான காரணமாக கொவிட் நிமோனியா தாக்கம் மற்றும் சிறுநீரக நோய் தாக்கம் அதிகரித்தமை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 195 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 460 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 418 பேருக்கும், சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 35 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 56 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 343 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 704 பேர் குணமடைந்து நேற்றைய தினம் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 ஆயிரத்து 943 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 620 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரையான காலப்பகுதியில் 12 இலட்சத்து 13 ஆயிரத்து 18 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தலாவாக்கலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்!

தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தலாவாக்கலை – ஹெலீரூட் வன பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 05 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. தலாவாக்கலை –...

யாழ் மாநகர சபை முதல்வரை சந்தித்த இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Bernard lelarge யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் யாழ்ப்பாண...

தசுன் சானக்கவின் கடவுச் சீட்டு காணாமல் போனமை குறித்து நாமல் ராஜபக்ஸவினால் அறிக்கை கோரல்..!

இலங்கை கிரிகெட் அணி வீரர் தசுன் சானக்கவின் கடவுச் சீட்டு காணாமல் போனமை குறித்து, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இருபதுக்கு இருபது கிரிகெட் தொடருக்கான...

5 இலட்சம் sinopharm கொரோனா தடுப்பூசியினை நன்கொடையாக பெற்றுக் கொண்ட ஈரான்!

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் sinopharm கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொண்டதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்கமைய,   நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படுமென ஈரான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை,...

மைதானங்களை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழில் முன்னெடுப்பு!

நாடளாவிய ரீதியில் 332 கிராம விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்படி, இதற்கான நிகழ்வு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன்...

Developed by: SEOGlitz