மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு, எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட RAPID ANTIGEN பரிசோதனையில் இதுவரை 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐந்து பேர் அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், தொற்றாளர்களுடன் தொடர்புடைய 280 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், எண்ணாயிரத்து 600 பேருக்கு, ANTIGEN பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.