மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 178 பேர் அடையாளம் – முழு விபரம் உள்ளே!

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 178 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, மினுவாங்கொடை மற்றும்  பேலியகொடை கொரோனா கொத்தனியுடன் தொடர்புடைய கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 124 ஆக உயர்வடைந்துள்ளது.

- Advertisement -

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 558 பேர் குணமடைந்து வீடுகளுக்கு இன்றைய தினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 560 ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொற்றினால் இதுவரை 116 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் 6 ஆயிரத்து 544 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், 498 பேர்  தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் 53 தனிமைப்படுத்தல் நிலையங்களில்  5 ஆயிரத்து 279 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்றைய நாளில் 12 ஆயிரத்து 31 பி சி ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி  தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்து 27 ஆயிரத்து 928 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்...

தெற்கு அதிவேக பாதையில் பயணித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெற்கு அதிவேக பாதையில் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் இன்று கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளங் காணப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக பாதையில் பயணித்த பஸ் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட  ரெப்பிட் என்டிஜன் பரிசோதனையில் பயணி ஒருவருக்கு...

நாட்டின் வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை : திஸ்ஸ அத்தநாயக்க!

தேசிய வருமானத்தினை ஈட்டித்தரும் நாட்டின் பெறுமதியான வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடமல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஊடகங்களுக்கு...

நாடாளுமன்றத்தை மூடுவது தொடர்பாக சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை மூடுவது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள  நிலையில் ஊடகங்களுக்கு  கருத்துரைக்கையில் சபாநாயகர்  இதனை கூறியுள்ளார். "கொரேனா தொற்றை...

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு அரசாங்கம் நிதியுதவி!

வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட 864 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆம் திகதியில் இருந்து 14 நாட்கள் பட்டானிச்சூர் பகுதி சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது. வவுனியா,...

Developed by: SEOGlitz