நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதை மை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 221 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானோருடன் நெருங்கிப் பழகியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய நாளில் மாத்திரம் 472 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 963 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 410 பேர் குணமடைந்த நிலையில் நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளனர்.
இதன்மூலம் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 226 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 168 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 725 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 7 இலட்சத்து 90 ஆயிரத்து 896 PCR பரிசோலனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
..