மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல்மாகாணத்தில் இரண்டாம் நாள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு!

- Advertisement -

மேல்மாகாணத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் முழுமையாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மாகாண மட்டத்தில் அமுல்படுதப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் திங்கற்கிழமை காலை 5 மணிக்கு தளத்தப்படும்.

- Advertisement -

மேலும், வடமேல் மாகாணத்தில் சில பொலிஸ் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் பாதுகாப்பு மற்றும் சுகாதார தரப்பினரினால் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு காலப்பகுதியில், மேல் மாகாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்கள் தொடர்பான தகவல்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 62 எரிபொருள் நிலையங்களும், கம்பஹா மாவட்டத்தில் 68 நிலையங்களும், களுத்தறை மாவட்டத்தில் 27 எரிபொருள் நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலப்பகுதியில், அத்தியவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட ஏனைய சேவையாளர்களின் நலன்கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத் தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, திறக்கப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்கள் தொடர்பான தகவல்களை  www.ceypetco.gov.lk என்ற இணைத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கவனத்தில் கொண்டு இன்றைய தினத்தில் உரிய நேரத்தில் ரயில் சேவைகள் இடம்பெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாளைய தினம் விடுமுறை என்பதினால் ஏற்கனவே அறிவிக்க்பட்டதன் பிரகாரம் சில பகுதிகளுக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ரம்புக்கன, அவிசாவெல்ல மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் பிரதான ரயில் சேவைகள் இடைநிறுத்தபட்டுள்ளன.

மேலும், பெலியத்த, காலி, அலுத்கம மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் இருந்து மருதானை நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் தெற்கு அதிவேக வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடவத்தை கொட்டாவ பகுதியில் இருந்து வெலிப்பன்ன வெளியேறும் பகுதிவரை மாத்திரமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை ஹம்பாந்தோட்டை பகுதியில் இருந்து அதிவேக வீதியூடாக கொழும்பு நகருக்குள் உட்பிரவேசிக்க முடியாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அதிவேக வீதியினை பயன்படுத்துபவர்களுக்கு குறித்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் உரித்தாகாது  எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தெதுருஓயா பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை!

தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை  சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த, பொலிஸ்  கான்ஸ்டபிள் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்...

நாளை விடுவிக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பிலான முழு விபரம் உள்ளே!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய  மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி,  கரையோர பொலிஸ் பிரிவு மற்றும் புறக்கோட்டை...

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை விடுவிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன. இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, வெரலபட மற்றும் புறக்கோட்டை ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட உள்ளன.

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்து 488 பேர் இன்று நாடு திரும்பினர்!

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் பல்வேறு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்து மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதன்படி, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 78 பேரும்,...

கண்டி – அக்குரணை பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா!

கண்டி மாவட்டத்தின் அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, அக்குரணை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 71...

Developed by: SEOGlitz