மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா அச்சம்: தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அண்மையில் மாத்தறை பகுதியில் வைரஸ் தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டமை மற்றும் அவருடன் தொடர்பைப் பேணியவர்கள் முறையாக தனிமைப்படுத்தலை பூரணப்படுத்தாமை என்பன இதற்கு சிறந்த உதாரணமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் கொரோனா வைரஸ்தொற்றுடன் அடையாளம் காணப்படுவதாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை எனவும்  தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

IPL தொடரின் மாபெரும் அணிகளுக்கிடையிலாக போட்டி இன்று!

13 ஆவது IPL தொடரின் 51 மற்றும் 52 ஆவது போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதன்படி, 51 ஆவது போட்டி Delhi Capitals மற்றும் Mumbai Indians ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது. இந்த போட்டி,...

நாட்டின் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும்!

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பரவல் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்...

நாட்டில் மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சுகாதார தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 399...

வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், 2020 நிதியாண்டிற்கான இரண்டு...

முற்றாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – டிக்கோயா நகரம் வழமைக்கு திரும்பியது!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ருந்த ஹட்டன் - டிக்கோயா நகரின் ஒருபகுதி மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சில கடைகளை திறப்பதற்கு சுகாதார தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றாளர்...

Developed by: SEOGlitz