மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்ய பிரஜை தங்கியிருந்த விடுதி தொடர்பாக வெளியான தகவல்!

- Advertisement -

கொரோனா தொற்றுக்குள்ளானதாகக் கூறப்படும் ரஷ்ய பிரஜை தங்கியிருந்த சுற்றுலா ஹோட்டலில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மாத்தறை பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த குறித்த ரஷ்ய பிரஜையொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இந்த நிலையில் குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட  இரண்டாவது பி.சி.ஆர் அறிக்கை இன்று கிடைக்கப்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி மத்தளை சர்வதேச விமான நிலையம் ஊடாக 15 பேர் கொண்ட ரஷ்ய பிரஜைகள் குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் நாடு திரும்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் அவர்களுள் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

முன்னதாக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் ஊடாக குறித்த அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வத்தளையிலுள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா!

வத்தளை பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் சுமார் ஆயிரம் பேர் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர்களுள் 122 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை...

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இதுவரையான காலப்பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் வத்தளை...

கம்பஹாவில் தொழிற்சாலை ஊழியர்கள் 452 பேருக்கு கொரோனா!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலைகளின் ஊழியர்கள்  452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அனைவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற நால்வருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சநிலைமைக் காரணமாக யாழ்ப்பாண நகரில் உள்ள சில கடைகள் சுகாதார துறையினரால் மூடப்பட்டுள்ளன. கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி...

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம்!

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்...

Developed by: SEOGlitz