மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் இன்று குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.

- Advertisement -

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 324 ஆக காணப்படுகிறது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 182 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 52 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக காணப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 75 ஆயிரத்து 590 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டின் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும்!

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பரவல் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்...

நாட்டில் மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சுகாதார தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 399...

வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், 2020 நிதியாண்டிற்கான இரண்டு...

முற்றாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – டிக்கோயா நகரம் வழமைக்கு திரும்பியது!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ருந்த ஹட்டன் - டிக்கோயா நகரின் ஒருபகுதி மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சில கடைகளை திறப்பதற்கு சுகாதார தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றாளர்...

உள்ளுர் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம்: தயாசிறி ஜயசேகர கருத்து!

நாட்டின் தேசிய கொடி உள்ளிட்ட உள்ளுர் உற்பத்திகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உள்ளுர் தயாரிப்புக்களான கைவினைப் பொருட்கள் ஆடை உற்பத்தி துறையினை...

Developed by: SEOGlitz