மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் ரயில்வே பணியாளர்களுக்கு கொரோனா தொற்று? – சுகாதாரப்பு வெளியிட்டுள்ள தகவல்..!

- Advertisement -

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட ரயில்வே பணியாளர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவர், தப்பியோடிய நிலையில் மன்னார் ரயில் நிலையத்தில் தலைமைறைவாகியிருந்தார்.

- Advertisement -

இதனையடுத்து, குறித்த நபரை பிடிப்பதற்காக உதவிய மூன்று ரயில்வே பணியாளர்களிடம்  PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, PCR பரிசோதனை பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நபருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் ரி.வினோதன்  தெரிவித்துள்ளார்

அத்துடன், மூடப்பட்டுள்ள மன்னார் ரயில் நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பில் கவனஞ் செலுத்தி வருவதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது இதற்கமைய, இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப்...

பாகிஸ்தானில் 262 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: இருவருக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆடைத்...

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பிட்டிய சுமன தேரர் தொடர்பில் இவ்வாறு...

ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை!

உரிய தகைமைய பூர்த்தி செய்துகொண்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆசிரிய உதவியாளர் நியமனம்...

20 ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்!

எதிர்க் கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. குறித்த சட்டமூலம் அமளி துமளிகளுக்கு மத்தியில் நீதியமைச்சர் அலி சப்ரியினால் சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், சஜித்...

Developed by: SEOGlitz