மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 664 பேர் நாட்டிற்கு வருகை!

- Advertisement -

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 664 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 3 விசேட விமானங்களின் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்படி, கட்டாரின் தோஹா விமான நிலையத்தில் இருந்து கட்டார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான QR 668 எனும் இலக்க விசேட விமானம் மூலம் 81 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அதிகாலை 1.45க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் விமான நிலையத்தில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 266 எனும் இலக்க விசேட விமானம் மூலம் 293 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அதிகாலை 4.53க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சவூதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 226 எனும் இலக்க விசேட விமானம் மூலம் 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அதிகாலை 4.23க்கு மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத்தளை மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களுக்கு வருகை தந்த அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாளைய தினத்திற்குள் கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கும் சாத்தியம் – சுகாதார அமைச்சு

நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்ததும், அதனை உடனடியாக வழங்குவதற்கு தேவையான முன்னேற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்க – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி!

தென்னாபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. பாகிஸ்தான் - கராச்சியில் இடம்பெறும் இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இதன்படி, தமது...

நாளை முதல் FACEBOOK வழங்கவுள்ள புதிய வசதி – இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையில் சுமார் 6 தசம் 5 மில்லியன் FACEBOOK பயனாளர்கள் காணப்படுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல்...

நாட்டின் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 369 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 709...

பிட்டபெத்தர பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தொற்றுக்குள்ளான சிலர் அடையாளம்!

மாத்தறை மாவட்டத்தில் - பிட்டபெத்தர பகுதியிலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மொரவக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12 முதியோர்களுக்கும், முதியோர் இல்லத்தில்...

Developed by: SEOGlitz