நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 6 பேர் மற்றும் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேர் ஆகியோருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கந்தகாடு புனர்வாழ்வு மத்தியநிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த கைதிகள் 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 9 பேர் குணமடைந்து நேற்றைய தினம் தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து தொள்ளாயிரத்து 35 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 193 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், 37 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக காணப்படுகின்றது.
மேலும் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 42 ஆயிரத்து தொள்ளாயிரத்து 84 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.