மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓமான் மற்றும்  சீனாவிலிருந்து 306 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

- Advertisement -

கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள  சுமார் 306 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஓமான் மற்றும்  சீனா ஆகிய நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக எமது  விமான நிலைய  செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

சீனாவின் ஷங்காய் விமான நிலையத்திலிருந்து கட்டு நாயக்க விமான நிலையம் நோக்கி பயணித்த எம் யூ 231 எனும் விமானமூடாக   இலங்கை பிரஜைகள் 10  பேர் நாட் டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதுடன் ஓமான் மஸ்கட் நகரில் இருந்து பயணித்த யுஎல் 206 எனும் விமானமூடாக 296 இலங்கையர்கள் இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளானவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள  இலங்கை பிரஜைகள் அனைவரும் விமான நிலையத்தில் பி. சி. ஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஹேமசிறி பெர்ணான்டோவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : முன்னாள் ஜனாதிபதி மறுப்பு!

உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்த கருத்தினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி...

ஹரீன் பெர்ணான்டோவினது கருத்து உண்மைக்குப் புறம்பானது : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ முன்வைத்த கருத்தினை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளார். அத்துடன், இந்த கருத்திற்கு...

மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள்!

நாட்டில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு  விசேட சலுகை வழங்குவதற்கு...

பொதுஜன பெரமுனவில் இருந்து முக்கிய நபர் நீக்கம்!

பதுளை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆதர் சில்வா நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர சபையின் தலைவர் பிரியந்த...

Developed by: SEOGlitz