மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசியப்பட்டியல் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

- Advertisement -

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் வர்த்தமானியில் வெளியிடுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி  குறித்த பெயர்ப்பட்டியல்கள் அரச அச்சகத்திற்கு  இன்று  முற்பகல் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும்  தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அபே ஜனபல கட்சி  ஆகியவற்றின்  தேசியப்பட்டியில் உறுப்பினர்கள் இதுவரை பெயரிடப்படவில்லை எனவும்  தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

2020 பொதுத்தேர்தலில்  தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  29 பேர்  7  கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்பிரகாரம்  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக 17 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக  7 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் சட்டத்தரணி சாகர காரியவசம் அஜித் நிவாட் கப்ரால்மொஹமட் அலி சப்ரி ஜனாதிபதி சட்டத்தரணி  ஜயந்த வீரசிங்க,  மஞ்சுள திசாநாயக்க  ,சிரேஷ்ட பேராசிரியர்  ரஞ்சித் பண்டார ,கெவிது குமாரதுங்க  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  மொஹமட் முஸ்ஸமில்  ,பேராசிரியர்  திஸ்ஸ விதாரண, யதாமினி குணவர்தன, சுரேன் ராகவன் , டிரான் அலஸ்,விசேட வைத்திய நிபுணர்  சீதா அரம்பேபொல

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜயந்த கெடகொட,மொஹமட்  பலீல்  மர்ஜான் ஆகியோரின் பெயர்கள் தேசியப்பட்டியல்  வர்த்தமானியில் பெயரிடப்பட்டுள்ளனர்

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக ரஞ்சித் மத்தும பண்டார,ஹரின்பெர்ணாண்டோ,இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், திஸ்ஸ அத்தநாயக்க,இரான் விக்ரமரட்ன.மயந்த திசாநாயக்கடயனா கமகே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன அத்துடன் தேசிய மக்கள் கட்சி சார்பாக  பேராசிரியர்  ஹரினி அமரசூரி    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக தவராசா கலையரசன்  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக  செல்வராசா கஜேந்திரன்  ஆகியோர்  நாடாளுமன்ற உறுப்பினர்களாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை தேசிய பட்டியல்  உறுப்பினர்களின் பெயர்விபரங்களை இதுவரை வெளியிடாத  அரசியல் கட்சிகள் இன்று பிற்கல் 4 மணிக்கு முன்பாக அதனை  சமர்ப்பிக்க   வேண்டும் என  தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறு கிடைக்கப்பெறாவிடின் நாடாளுமன்றில் இரண்டு ஆசனங்கள் வெற்றிடமாக காணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டத்துறை பணிப்பாளர்  நிமல் ஜீ புஞ்சி  ஹேவா  தெரிவித்துள்ளார்.

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

20 ஆவது திருத்தம் குறித்து பிரதமர் வலியுறுத்தல்….

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...

பெருந்தோட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான எதிர்காலதிட்டங்கள் குறித்து...

கண்டி பூவெலிக்கடை கட்டட விவகாரம்: உரிமையாளருக்கு விளக்கமறியல்!

கைது செய்யப்பட்ட கண்டி – பூவெலிக்கடை பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி...

முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் வழி!

தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை மனம் உருகி 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார் என்பது நம்பகமிக்க உண்மை. இந்த மந்திரத்தை உச்சரித்தால் பல கோடி...

கிராம உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

தமது கடமை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லை என கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, கிராம உத்தியோகத்தர்களின் சங்கத் தலைவர்...

Developed by: SEOGlitz