மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 47 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகி இருந்த  47 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஜப்பான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்றவர்கள் இவ்வாறு இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான Q.R – 668 எனும் விமானம் ஊடாக தோஹாவில் இருந்து 41 பேர் இன்று அதிகாலை 1.45 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதேபோன்று, ஏனைய ஆறு பேர் ஶ்ரீலன்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் – 455 எனும் விமானம் ஊடாக ஜப்பான் நரீட்டா நகரில் இருந்து இன்று அதிகாலை 3.15 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மேலும், இந்தியாவின் சென்னை நகரில் இருந்து இண்டிகோ  விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று இன்று  காலை 7.31 அளவில் மத்தள  விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் பணியாற்றும் 58 கடற்படையினரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வதற்காக குறித்த விமானம் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...