மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று -இன்றைய நிலவரம் (31/07)

- Advertisement -

பொலன்னறுவை லங்காபுர பகுதியில் பயணத் தடை  விதிக்கப்படவில்லை  என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட  வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்ட  பகுதிகளில் முன்னெடுக்கப்படும் வழமையான செயற்பாடுகளை சுகாதார சேவையாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

லங்காபுர பிரதேச செயலகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்பட்டுத்தப்பட்டது.

இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரின் உறவினர்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடந்து, குறித்தப் பகுதியில் 325 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதுடன் அவர்களுக்கு  பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளாதாவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியானதன் பின்னர் குறித்த பகுதியில் நிலைமைகளை அறிவிக்க முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மூலம் தொற்று பரவாமல் தடுப்பதற்கு சுகாதார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட  வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதற்கமைய, நேற்று மாத்திரம் நால்வர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 333 ஆக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 86 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையில் கண்காணிக்க்படப்டு வருகின்றனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான  470  பேர் தொடந்தும் வைத்தியசாலைகளில் இருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...