பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான ஷஹிட் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஷஹிட் அஃப்ரிடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று பிற்பகல் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நேற்று முன்தினத்தில் இருந்து தான் உடல்நிலை பாதிப்பை உணர்ந்ததாகவும், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஷஹிட் அஃப்ரிடியின் சக வீரர்களான, மொஹம்மட் ஹஃபீஸ், சொஹெய்ல் தன்வீர் மற்றும் கம்ரன் அக்மால் உள்ளிட்ட பலர் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.