மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்தது

- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்துள்ளது.

நேற்றைய நாளில் மாத்திரம், இது வரையான காலப்பகுதியில் 18 ஆயிரத்து 375 பேர் அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதன் அடிப்படையில், கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 20 இலட்சத்து 7 ஆயிரத்து 232 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் இதுவரை, 1 இலட்சத்து 12 ஆயிரத்து 469 பேர் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா  தொற்றுக்குள்ளாகியிருந்த 7 இலட்சத்து 58 ஆயிரத்து 512 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய நாளில் மாத்திரம், இது வரையான காலப்பகுதியில் 1 இலட்சத்து 12 ஆயிரத்து 472 பேர் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில், கொரோனா தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 70 இலட்சத்து 81 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் இதுவரை, 4 இலட்சத்து 5 ஆயிரத்து 74 பேர் உயிரிழந்துள்ளதுடன், கொரோனா  தொற்றுக்குள்ளாகியிருந்த 34 இலட்சத்து 53 ஆயிரத்து 648 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பாக கல்வி அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அண்மையில் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றையதினம் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன்,...

மாவட்டங்களுக்கிடையிலான இரயில் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்!

வெளிமாவட்டங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம்அலை ஏற்பட்டதன் காரணமாக அலுவலக ரயில் சேவைகள் தவிர்ந்த ஏனைய ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. எனினும், தற்போது...

கொரோனா தொற்றினால் சடுதியாக அதிகரித்த உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து...

சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம் : பிரதி சபாநாயகர்!

கொரோனா தொற்று குறித்த உரிய சுகாதார வழிமுறைகளை கையாண்டு நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சி...

Developed by: SEOGlitz