மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றுக்குள்ளான 40 பேர் நேற்றைய தினம் அடையாளம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரிப்பு

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

- Advertisement -

இவர்களில் ஒருவர், ரஷ்யாவில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், பிட்டிபன தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் எனவும், மற்றுமொருவர், டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், கிராகம தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குவைத்தில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இரணைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவரும், கல்பிட்டிய தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும், முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேரும் என 7 கடற்படையினர் நேற்று அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

மேலும், கல்பிட்டிய தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, கடற்படையினர் ஒருவருடன் நெருங்கிப் பழகிய ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதே நேரம், ஏனைய 27 கொரோனா தொற்றாளர்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 823 ஆக காணப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 12 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து நேற்று வெளியேறியதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 411 கடற்படை வீரர்கள் உள்ளடங்குவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று குணமடைந்த 12 பேரில், 8 பேர் கடற்படையினர் எனவும், கடற்படை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், 84 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 849 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 144 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 93 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 41 பேரும், இரணவில வைத்தியசாலையில் 50 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 92 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 107 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் 97 பேரும், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் 44 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் 107 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாடுமுழுவதும் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 68 ஆயிரத்து 204 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம், ஆயிரத்து 783 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் 40 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இதுவரையான காலப்பகுதியில் 11 ஆயிரத்து 614 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளனர்.

இதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம்  நான்காயிரத்து 982 பேர் தனிமைப்படுத்தல்  நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  கொரோனா தொற்றுக்குள்ளான ராணுவ உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்  அவர்களுடன்  தொடர்புடைய  ஒன்பது  பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சமூகத்தில் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பகுதிகள்

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா இன்று இந்த  அறிவிப்பை விடுத்துள்ளார். இதன்படி, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

களனிவெளி புகையிரத சேவைகள் பாதிப்பு

கொழும்பு முதல் அவிசாவளை வரையிலான களனிவெளி புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த பகுதியில் சேவையில் இயங்கும் இரு புகையிரதங்களில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாக குறித்த ரயில் போக்குவரத்துக்கள்...

லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை- தலாவக்கலை  நகரசபை தலைவர்  உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி   தலவாக்கலை நகரில் மண்டபம் ஒன்றில் கொண்டாட்ட நிகழ்வுகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில்  குறித்த நபர்கள்...

நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன

நாட்டில் தற்போதைய  நிலையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்   நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலைமையில்  காணப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில்...

தபால் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவை  இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய  கடிதங்கள்  விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...

Developed by: SEOGlitz