மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் நேற்று அடையாளம் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1633ஆக அதிகரிப்பு

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர்  நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு  தெரிவிக்கின்றது.

- Advertisement -

இவர்களில் 7 பேர், ரஷ்யாவில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கடற்படை வீரர்கள் நால்வரும் குறித்த கொரோனா தொற்றாளர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கல்கிரியாகம தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவரும், ஏனைய தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்த ஒருவருமாக, 4 கடற்படை வீரர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், பங்களாதேஷில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 801 ஆக காணப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 20 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து நேற்று வெளியேறியதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தவர்களில்  403 கடற்படை வீரர்கள் உள்ளடங்குவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று குணமடைந்த 20 பேரில், 15 பேர் கடற்படையினர் எனவும், கடற்படை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், 74 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 822  பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 148 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 91 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 46 பேரும், இரணவில வைத்தியசாலையில் 50 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 92 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 97 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் 95 பேரும், மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும்  கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  நாடுமுழுவதும்  கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 63 ஆயிரத்து 935  பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz