மெய்ப்பொருள் காண்பது அறிவு

திட்டமிட்டபடி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட மாட்டாது

- Advertisement -

திட்டமிட்டதன் பிரகாரம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய, விமான நிலையத்தை திறப்பதில் மேலும் கால தாமதம் ஏற்படலாம் என விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்துள்ள நிலையிலேயே, விமான நிலையத்தை திறப்பதில் கால தாமதம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கமைய, நான்கு அல்லது ஆறு மணித்தியாலங்களுக்கு ஒரு முறையே விமானங்கள் தரையிறக்கப்படுவதாகவும், இதனால் நாளொன்றுக்கு நான்கு விமானங்களை மாத்திரமே தரையிறக்க முடியும் எனவும் விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார சபையின் தலைவர் ஜி.ஏ சந்திரசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனுக்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது நபர் ஒருவரை பணம் கேட்டு அச்சுறுத்தியமை மற்றும் நபர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மாலக்க சில்வா...

புதிய அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனஞ் செலுத்த வேண்டியவை!

புதிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இரண்டு விடயங்கள் குறித்து விசேட கவனஞ் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் புதிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பது தொடர்பான விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக...

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 638 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் குணமடைந்ததை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2...

லெபனானிற்கு நிவாரணங்களை அனுப்பி வைப்பதற்கு தீர்மானம்!

லெபனான் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தை அடுத்து லெபனான் நாட்டிற்கு நிவாரணங்களை அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 200 இற்கும் அதிகமானவர்கள்...

மெக்சிகோவின் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் 19 பேரை கைது செய்ய உத்தரவு!

மெக்சிகோ நகரின் முன்னாள் மத்திய காவல்துறை அதிகாரிகள் 19 பேரை கைது செய்யுமாறு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் நிதிமோசடி குற்றச்சாட்டின் கீழ் குறித்த காவல்துறை அதிகாரிகள் 19 பேரை...