எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் பல இடங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று இரவு வேளைகளில் தெற்கு, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஏனைய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும், குறிப்பாக, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் எச்சரிக்கை விடுக்கபபட்டுள்ளது.
அத்துடன், தெற்கு, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் நாளைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாவதுடன், சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் அறிவிக்க்பப்டுள்ளது.
மேலும், நாளைய தினமும், மாலை அல்லது இரவு வேளைகளில் நாட்டில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனால், மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் மற்றும் வெள்ளம், மின்னல் தாக்கம், மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் அனர்த்தங்கள் இடம்பெறுகின்ற சந்தர்பங்களில் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.