மெய்ப்பொருள் காண்பது அறிவு

வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

- Advertisement -

மே, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், மழையுடனான வானிலை தொடரும் நிலையில், காற்றின் வேகமானது 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது

 மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 ஏதேனும், அனர்த்தங்கள் இடம்பெறுகின்ற சந்தர்பங்களில் இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தாழமுக்கமானது சூறாவளியாக வலுவடையுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்த நிலையில், குறித்த அம்பன் சூறாவளி அடுத்துவரும் நாட்களில்  வங்காள விரிகுடாவின் வடக்கு திசையில் பயணிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்காரணமாக, அடுத்துவரும் 24 மணித்தியாளங்களுக்கு நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

 மேலும், காற்றின் வேகமானது 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமெனவும், இதன்போது கடல் சற்று கொந்தளிப்பாக இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிவித்தல்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற் பிரதேசங்களில் கடலையானது உயர்வடைந்து காணப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் கடலலை நிலபரப்பிற்குள் ஊடுறுவும் வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு நகரின் பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்விநியோகத்தடை

கொழும்பு நகரின் பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி நாளை காலை 9 .00 மணிதொடக்கம்  கொழும்பு 1 முதல் 3 வரையும் மற்றும் கொழும்பு 7 முதல் 12...

இலங்கை கடற்பரப்பில் தமது நாட்டு மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கண்டனம்

இலங்கை கடற்படைப் படகில் மோதுண்டு  தமது நாட்டு  மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கண்டனம் வௌியிட்டுள்ளது,. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து  அந்த  நாட்டு வௌியுறவுத்துறை அமைச்சர் தமது அதிருப்தியை...

நுவரெலியா வலப்பனை பகுதியில் நில அதிர்வு

நுவரெலியா  வலப்பனை பகுதியை அண்மித்த பிரதேசங்களில் இன்று அதிகாலை 1.8 ரிக்டர் அளவிலான நில அதிர்வு  ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 அளவில் குறித்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க...

மலையக மார்க்கத்தில் ரயில் தடம்புரள்வு

மலையக ரயில் மார்க்கத்தில் ஹாலிஎல மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட பகுதியில் பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் ரயில் தடம் புரண்டுள்ளது குறித்த ரயில் இன்று அதிகாலை 5.45 க்கு பதுளையில் இருந்து கண்டி நோக்கி...

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதி எச் எம் எம் நவாஸ் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில்ஜனாதிபதியினால்  இந்த விசேட குழு...

Developed by: SEOGlitz