வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கடற்படையினரின் பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
கடற்படையினரை ஏற்றி சென்ற பேருந்து ஒன்றுடனே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கனகராயன்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ் விபத்துச் சம்பவத்தில் கடற்படையினரின் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்துள்ளதுடன் பட்டா ரக வானத்தின் முன்பகுதியும் , லொறியின் முன்பகுதியில் சிறிய இடமும் சேதமடைந்துள்ளதுடன் எவ்வித உயிராபத்துகளும் இடம்பெறவில்லை.