மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழர்களுக்கு எதிராக யுத்தம் நடத்தப்படவில்லை – மகிந்த ராஜபக்ஸ

- Advertisement -

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தமானது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமல்லவென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் எப் பீ ஐ நிறுவனத்தினால் பயங்கரவாதிகள் என பெயரிடப்பட்ட அமைப்புக்கு எதிரான யுத்தமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

யுத்த வெற்றியின் 11 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அனுப்பியுள்ள அறிக்கையிலேயே  இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது,

இந்த யுத்த வெற்றியின் மூலம் தமிழ் அரசியல்வாதிகள் புலிகள் தொடர்பான அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைமை காணப்படவில்லை என பிரதமர் கூறியுள்ளார்,

அத்துடன் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டமையின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தல்களை நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளமையினால் அந்த பிரதேசங்களை சேர்ந்த மக்களின் இறையாண்மை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை சமூக மட்டத்தில் சிவில் மற்றும் இராணுவம் என்ற செயற்கையான பிளவொன்றை ஏற்படுத்த நல்லாட்சி அரசியல்கட்சிகள் மேற்கொண்டுள்ள வஞ்சகமான முயற்சியை கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

ஓய்வுபெற்ற முப்படை அதிகாரியொருவரை நியமிக்கும் போது அதனை இராணுவ மயமாக்கல் என சிலர் காட்ட முற்படுவதாகவும் எவ்வாறாயினும் ஓய்வு பெற்ற முப்படையினரும் சிவில் பிரஜைகளாவர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.,

எனவே தமது அரசாங்கம் பதவியிலுள்ளபோது முன்னாள் இராணுவ வீரர்கள் பல்வேறு பதவிகளை வகிப்பார்கள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்,

மேலும் நல்லாட்சி அரசாங்கம் முப்படையினரை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்தமை, இராணுவத்தினரை வேட்டையாடி அவமானத்துக்குட்பத்திய விடயங்களை தாம் ஒரு போதும் மறக்கப் போவதில்லை எனவும் அவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு!

2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கத்தினால், 22 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி, கடந்த...

போதைப்பொருளுடன் சீதுவை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது!

சீதுவை பகுதியில் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 150 கிராம் ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா 6 கிலோ ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த...

இலங்கயில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் மாலி நாட்டிற்கு அனுப்பி வைப்பு!

இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட புதிய ஒன்பது நவீன Unibuffels கவச வாகனங்கள், மாலி நாட்டில் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன்,  புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்களும் இவ்வாறு பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...

Developed by: SEOGlitz