மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிப்பு- 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

- Advertisement -

நாட்டில் தொடர்ந்துவரும் அதிக மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த அறிக்கையில், நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலையான செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல, கலவான, நிவித்திகல, எலபாத்த, இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவுஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டிய, வறக்காபொலை, றம்புக்கண, கலிகமுவ, கேகாலை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகலை மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹாவெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு செம்மஞ்சள் நிற மண்சரிவுஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின், கடவத்சதர, அக்மீமன, எல்பிட்டிய, நியகம, நாகொட, தவலம, நெலுவ மற்றும் போப்பே போத்தல ஆகியபிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவவட்டத்தின் உக்குவெல பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, இரத்தினபுரி மாவட்டத்தின், எஹெலியகொட, குருவிட்ட, அயாகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின், அகலவத்த, பாலிந்த நுவர, புளத்சிங்ஹல, வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின், பிட்டபெத்தர மற்றும் கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, யட்டியாந்தோட்டை மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின், கங்கஹல கோரளை மற்றும் தும்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இவ்வாறு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக , மலைபாங்கான பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது

மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் கிரிக்கட் சுற்றுத்தொடர்கள்

2020 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கிரிக்கட் போட்டித்தொடர்களுக்குரிய மீள் திருத்தப்பட்ட முழுமையான நேர அட்டவனையை அவுஸ்திரேலிய  கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது அவுஸ்திரெலியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா...

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...

மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி….

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  சுகாதாச அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...

மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 8 பேரும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்று தேசிய...