தெற்காசிய நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தர முடியாத நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கை மாணவர்கள் அனைவரும் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த 10 நாட்களில் தெற்காசிய நாடுகளில் இருந்து ஆயிரத்து 65 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த மாணவர்களை அழைத்துவருவதற்காக ஒன்பது தடவைகள் விமான சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது
தெற்காசியாவில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்துவரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களதோஷ் போன்ற நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கை மாணவர்கள், பல்வேறு கட்டமாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளை அழைத்துவரும் வேலைத்திட்டத்தின் கீழ், தெற்காசியாவில் உள்ள இலங்கை மாணவவர்களுக்கே முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடந்த மாதம் 14 ஆம் திகதி அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.