மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்யாவிருந்து 261 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

- Advertisement -

கொரோனா தொற்று அச்சநிலைக்கு மத்தியில் ரஷ்யாவில்  நிர்க்கதிக்குள்ளகியிருந்த இலங்கையர்கள் 261 பேர்  நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவர்கள் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து   கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்று இரவு 10.54 மணியளவில் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

இலங்கையில் இருந்து உயர்கல்வி நிமித்தம் ரஷ்யா சென்றிருந்த 30 வயதுக்குட்பட்ட மாணவர்கள் குழுவினர்  இவ்வாறு  அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கொரோனாதொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும்  விசேட திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டவர்கள்   இலங்கை விமானப்படையினரால்  கிருமி தொற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு    சுகாதார அதிகாரிகளுடாக கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து   அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு ராணுவத்தினரால் விசேட பேரூந்துகளில்  அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

 அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலிருந்து 304 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமைக்கு மத்தியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்  நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 304 இலங்கையர்கள்  நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான  இரண்டு  விமானங்கள் ஊடாக குறித்த இலங்கையர்கள்...

மதுபான சாலைகள் குறித்து அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை  முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 5 மற்றும் ஆறாம் திகதிகளில் அனைத்து...

கெப்பிட்டல் தொலைக்காட்சியின் இன்றைய காலை நேர பிரதான செய்திகள் | 07:30 | 30.05.2020

மறைந்த இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்றையதினம் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் கிரிக்கட் சுற்றுத்தொடர்கள்

2020 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கிரிக்கட் போட்டித்தொடர்களுக்குரிய மீள் திருத்தப்பட்ட முழுமையான நேர அட்டவனையை அவுஸ்திரேலிய  கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது அவுஸ்திரெலியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா...

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...