கொரோனா தொற்றுக்காரணமாக ஜப்பானில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 235 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் நரீட்டா விமான நிலையத்தின் ஊடாக ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ எல் 455 என்ற விமானத்தின் ஊடாக இன்று அதிகாலை 3.38 அளவில் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்..
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜப்பானில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த நபர்கள் மற்றும் பொதிகள் ஆகிய கிருமித் தொற்று நீக்கத்துக்குட்படுத்தப்பட்டன,
அத்துடன் இதன் போது அவர்களிடம் விமான நிலைய வைத்தியர்களால் கொரோனா பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன,
பின்னர் ஜப்பானில் இருந்து வருகை தந்த அனைவரையுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது,