கொரோனா தொற்று காரணமாக பங்களாதேஷில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள 273இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று டாக்கா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான U L 1422 எனும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நண்பகல் 12.24 அளவில் டாக்கா நகருக்கு பயணித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட செயற்திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த விமானம் இன்று 7.45 அளவில் மீண்டும் நாட்டை வந்தடையவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.