கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுததுவதற்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மற்றுமொரு தொகுதி மருத்துவ நன்கொடை பொருட்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த மருத்துவ நன்கொடை பொருட்களை ஏற்றிவந்த ஈஸ்டன் விமான சேவைக்கு சொந்தமான M U 231 எனும் விமானம் நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய முகாமையாளர் யுஸ்டஸ் சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த மருத்துவ நன்கொடை பொருட்கள் இலங்கைக்கான சீன தூதரகம் ஊடாக இன்று அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம், அவசர சிகிச்சைகளின் போது தேவைப்படுகின்ற ஓளடதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளடங்கிய
சுமார் ஒன்பதாயிரத்து 680 கிலோகிராம் நிறையுடைய ஆயிரத்து 6 பொதிகள் இவ்வாறு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.