தற்போதைய அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகளை எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ராஜபக்ஸாக்கள் அடக்குமுறையின் ஊடாக நாட்டை நிர்வகின்றார்கள்.எதிர்க் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்காக அடக்குமுறையை கையாளுகின்றமை குறித்து நாம் கவலையடைகின்றோம்.ஆனால் பாரிய பலத்துடன் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.ஆனால் அவர்களுடைய இந்த செயற்பாடுகளை நாம் முழுமையாக கண்டிக்கின்றோம்.அவர்கள் சம்பிக்க ரணவக்கவை கைது செய்தாரகள்.ஊழல் அல்லது திருட்டு செயற்பாடுகளுக்காக அவரை கைது செய்யவில்லை.அதனையடுத்து ராஜித சேனாரத்னவை கைது செய்தார்கள்.அவரையும் ஊழலுக்காகவோ அல்லது திருட்டு செயற்பாடுகளுக்கோகவோ கைது செய்யவில்லை.ஆனால் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்ற நபர்களை கைது செய்து, சட்டம் நிலைநிறுத்தப்படுவதையே மக்கள் எதிர்பார்கின்றார்கள்.இவற்றை செய்வதாக கூறியே அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்று ஊழல் மோசடிக்காரர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு அவர்களைப் பாதுகாக்கின்றார்கள்.சமூகத்திற்கு தேவையான விடயங்களை செய்கின்ற நபர்களின் தவறுகளைத் தேடி, இவ்வாறு பிரபல அரசியல்வாதிகளை கைது செய்கின்றார்கள்.