ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 633 பேர் இன்றைய நாளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 687 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்றைய நாளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக பதிவாகியுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றின் காரணமாக ரஷ்யாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 280 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 16 ஆயிரத்து 639 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.