ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதானவர்களுள் அதிகளவானோர் மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தை என சேர்ந்தவர்கள் என பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நேற்று இரவு வரையான 24 மணிநேரத்தில் மேல் மாகாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் 709 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 215 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனைக் கூறியுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டோரும் இதில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.,
இதேவேளை நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் எதிர்வரும் இரண்டு நாட்களில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்