மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தங்கியிருந்த மற்றுமொரு பாகிஸ்தான் குழு நாடு திரும்பியது

- Advertisement -

இலங்கையில் தங்கியிருந்த  மற்றுமொரு பாகிஸ்தான் பிரஜைகள் குழுவொன்று  இன்று பாகிஸ்தான் நோக்கி புறப்பட்டுள்ளது

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹாத் முன்னிலையில், அவர்கள் இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதன்படி, இலங்கையில் இருந்து புறப்பட்ட அவர்கள், பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில், தமக்கு உதவிகளை வழங்குவதற்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் தங்கியிருந்த 50 பேர் குழுவொன்று, கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும்  அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று...

சாரா என்ற புலஸ்தினி வழக்கு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி எனும் நபர் தொடர்பாக தகவல் வழங்கிய நபரிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்த வழக்கு, தேவை ஏற்படின் மீண்டும் அழைக்கப்படும் என கல்முனை நீதிமன்ற...

உலக வர்த்தக மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக வர்த்தக மையம் வெளியிட்டுள்ள...

அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்- சாள்ஸ் நிர்மலநாதன்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு...

அரசாங்கம் மீது குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர்!

ரிஷாட் பதியுதீனின் பெயரைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டில் பல்வேறு விடயங்களை மறைத்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார், CAPITAL...

Developed by: SEOGlitz