பாகிஸ்த்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 இருபதுக்கு 20 கிரிக்கட் தொடர்களை விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணியினை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன, .
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்து வருவதையடுத்து விளையாட்டு போட்டிகளை ஆரம்பிப்பதற்கு இங்கிலாந்து அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து கிரிக்கட் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 இருபதுக்கு 20 கிரிக்கட் தொடர்களை திட்டமிட்டபடி ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் 3 டெஸ்ட் மற்றும் 3 இருபதுக்கு 20 கிரிக்கட் தொடர்களுக்கு தயாராகும் பாகிஸ்தான் கிரிக்கட் அணி போட்டிகளுக்கு முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் என்று பாக்கிஸ்தான் கிரிக்கட் சபை தலைவர் வசிம் கான் (wasim khan) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.