மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் இருந்து நாட்டிற்கு போதைப்பொருட்களை கடத்த முயற்சித்த 9 பேர் கைது

- Advertisement -

தமிழகத்தின் இராமநாதபுரம் பகுதியில் இருந்து 5 கோடி இந்திய ரூபாபெறுமதியான போதைப்பொருட்களை  நாட்டிற்குள் கடத்திவருவதற்கு  முயற்சித்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் இராமநாதபுரம் பகுதியில் இருந்து   ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள்   நாட்டிற்கு கடத்திவரப்படவுள்தாக  கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

- Advertisement -

இந்த நிலையில்  நேற்று குறித்த சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டதாக  இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கையின் போது  இராமநாதபுரம் – திருவடனை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியினை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

போதைப்பொருட்கள் மற்றும்  கையடக்க தொலைபேசிகள் மற்றும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பணம் ஆகியன  இதன்போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த போதைப்பொருட்கள் சர்வதேச  சந்தையில் 5 முதல் 7 கோடி இந்திய ரூபா பெறுமதியானவை என கணக்கிடப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

 அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலிருந்து 304 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமைக்கு மத்தியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்  நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 304 இலங்கையர்கள்  நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான  இரண்டு  விமானங்கள் ஊடாக குறித்த இலங்கையர்கள்...

மதுபான சாலைகள் குறித்து அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எதிர்வரும் பொசன் பௌர்ணமி தினத்தை  முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 5 மற்றும் ஆறாம் திகதிகளில் அனைத்து...

கெப்பிட்டல் தொலைக்காட்சியின் இன்றைய காலை நேர பிரதான செய்திகள் | 07:30 | 30.05.2020

மறைந்த இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்றையதினம் கொட்டக்கலை சீ.எல்.எப் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் கிரிக்கட் சுற்றுத்தொடர்கள்

2020 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கிரிக்கட் போட்டித்தொடர்களுக்குரிய மீள் திருத்தப்பட்ட முழுமையான நேர அட்டவனையை அவுஸ்திரேலிய  கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது அவுஸ்திரெலியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா...

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...