இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 834 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று காரணமாக கடந்த மணித்தியாலங்களில் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும் கடந்த மணித்தியாலங்களில் 837 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதையடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி நாடாளாவிய முடக்கச்செயற்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வரும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மே மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னரும் ஊரடங்கை நீடிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் மாத்திரம் 16 ஆயிரத்து 500 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினம் மாத்திரம் ஆயிரம் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் மாத்திரம் இதுவரை 596 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது
இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றிலுருந்து 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளமை குற்றிப்பிடத்தக்கது